கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ். ஐ .எச். எஸ். காலனி, முகாம்பிகை நகரில் அருள்மிகு. எல்லை கருப்பராயன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் பூசாரி கணேசன் கோயிலுக்கு பூஜை செய்ய வந்தார். அப்போது கோவில் பூட்டுஉடைக்கப்பட்டிருந்தது.கிரில் கதவு சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.. உடனே உள்ளே சென்று பார்த்த போது மரபுநபர் ஒருவர் நின்று கொண்டிருப்பதை கண்டார். அந்த நபர் கருப்பராயன் சிலையில் இருந்து ஈட்டியை திருடுவதற்காக கையில் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார். உடனே கணேசன் சத்தம் போட்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து அந்த ஆசாமியை மடக்கிபிடித்தனர்.அவர் சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை கைது செய்தனா். விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தினவேல் என்பவரின் மகன் சிக்கிபாண்டி (வயது 26) என்பது தெரியவந்தது. இவர் அதே பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவிலில் புகுந்து ஈட்டி திருட முயன்றவர் கைது.
