கோவை ரங்கே கவுடர் வீதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருபவர் துரைராஜ் பாண்டியன் ( வயது 52)இவரது கடையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பக்கம் உள்ள பேரூரை சேர்ந்த செந்தில் குமரன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.கடந்த 4-ந் தேதி இரவில்செந்தில்குமார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சாவியை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று கதவைத் திறந்து அங்கு மேஜை டிராயரில் இருந்த ரூ 15 லட்சத்தை திருடி கொண்டு எங்கோமாயமாகிவிட்டார்.இதுகுறித்து துரைராஜ் பாண்டியன் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் வழக்கு பதிவு செய்து கடை ஊழியர் செந்தில் குமரனை தேடி வருகிறார்.