ஓடும் ரயிலில் தங்க நகைகளை கொள்ளை அடித்த கொள்ளையன் யார்?…

பெங்களூரு மாகடி ரோடு கேசவா நகர் முதல் குறுக்கு பகுதியில் வசிப்பவர் கருணாநிதி இவரது மனைவி மின்னலா வயது 61 இவர் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பங்காருபேட்டை க்கு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தை தாண்டி செல்லும்போது இவர் வைத்திருந்த பேக்கில் 5 சவரன் தங்க நகைகளை மதிப்பு ரூபாய் 2 1/2 லட்சம் ஆகும் இதை மர்ம கொள்ளையன் திருடி சென்றுள்ளான் இந்த கொள்ளை குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது சேலம் ரயில்வே டிஎஸ்பி பெரியசாமி நேரடி மேற்பார்வையில் ஜோலார்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் மின்னலா பயணம் செய்த ரயில் பெட்டியின் கடைசி பெட்டியை ஆய்வு செய்தார் அனைத்து ரயில் நிலையங்களிலும் சி சி டிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார் கொள்ளையன் மயக்கபொடியை தூவி கொள்ளையடித்தானா என்ற கோனத்தில் விசாரித்து வருகின்றனர் பாதிக்கப்பட்ட பெண் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் வெளியே உட்கார்ந்து கொண்டு அழுத கோலத்தில் கொள்ளையன் கையை நாகப்பாம்பு தீண்ட வேண்டும் என் புருஷன் கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்த நகை வியர்வை வை சிந்தி வாங்கி கொடுத்த நகை என அழுது கொண்டே இருந்தார்