5மாத பச்சிளம் குழந்தை மர்ம சாவு…

கோவை அருகே உள்ள இருகூர், சவுடேஸ்வரி நகரை சேர்ந்தவர் சக்திவேல் ( வயது 25)இவரது மனைவிக்கு 4-7- 23 அன்று பெண் குழந்தை பிறந்தது.நேற்று குழந்தை பால் குடித்துக் கொண்டிருந்த போது திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து சக்திவேல் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..