கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள பொனனாயூர் , வாய்க்கால் மேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர்கணேச மூர்த்தி அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போதுஅங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகஅதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், சந்தோஷ் குமார், வீரமுத்து, , ராமன், முத்துக்குமார், கார்த்திக், மணிகண்டன், கோவிந்தராஜ், காளிமுத்து, செந்தில் கணேஷ், ராஜகோபால், மற்றொரு காளிமுத்து இசாக் , நாகமாணிக்கம் கதிர்வேல் ,பரமசிவம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2பைக்குகளும் ,சூதாட பயன்படுத்தப்பட்ட 2சேவல்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
சேவல் சண்டை சூதாட்டம் .16 பேர் கைது பைக் பணம் பறிமுதல்…
