கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ராம பட்டினம்,போயர் காலனியை சேர்ந்தவர் செல்வன்.இவரது மகன் ஜீவா (வயது 27 ) கட்டிட தொழிலாளி. இவர் அவரது நண்பரது காரை விபத்து ஏற்படுத்தி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்காக அவரது நண்பர் ரூ 70 ஆயிரம் நஷ்ட ஈடு கேட்டாராம். இதனால் மனமுடைந்த ஜீவாநேற்று அங்குள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல வெள்ளலூர் பக்கம் உள்ள இடையர்பாளையம்,திலகர் வீதியைச் சேர்ந்தவர் குமார் என்ற மாரிமுத்து( வயது 51 ) கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். குடும்பம் நடத்துவதற்கு போதிய வருமானம் இல்லை. இந்த நிலையில் வாழ்க்கையில்வெறுப்படைந்து அவரது வீட்டில் மனைவியின் சேலையை மின்விசிறியில்கட்டி தூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி நாகரத்தினம் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரே நாளில் 2 பேர் தூக்கு போட்டு தற்கொலை …
