இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசை மங்கை திருக்கோவில் மங்களீஸ்வரர் மங்களேஸ்வரி திருக்கல்யாண மாலை சூலூர் வைத்தீஸ்வரன் ஆலய மார்கழி கமிட்டி குழு அன்பர்கள் சார்பில் உத்திரகோசமங்கையிலிருந்து கொண்டுவரப்பட்டு சூலூர் ஆலயத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி மற்றும் பக்தர்கள் திரளாக திருக்கல்யாணம் மாலையை திருக்கோவில் வளமாக கொண்டு வந்து வைத்தீஸ்வரனுக்கும் தையல்நாயகி அம்மனுக்கும் அணிவித்து திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. ஏராளமான பெண்கள் வருகை தந்து ஆருத்ர திருக்கல்யாண வைபவ வழிபாட்டில் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.