கோவை மாவட்டம், பொள்ளாச்சி காவல் நிலைய பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு 10 வயது சிறுமியைபாலியல் வன்புணர்ச்சி செய்த பொன்னுசாமி (வயது 53) என்பவர் மீது பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்டம், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிவுபெற்று வழக்கின் எதிரியான பொள்ளாச்சி பகுதியில் சேர்ந்த மயில்சாமி மகன் பொன்னுசாமிக்கு நேற்று 09.01.2025 அன்று 5 வருட சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5ஆயிரம்அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.மேலும் இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமை காவலர் மஞ்சுளா தேவி ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வெகுவாக பாராட்டினார்.
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 5 வருடம் சிறை தண்டனை…
