பைக் மீது கார் மோதி உல்லாச காதல் ஜோடி சாவு…

மயிலாடுதுறை சீனிவாச புரத்தைச் சேர்ந்த பிரகாஷ் வயது 26.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பண்டரிபுரத்தைச் சேர்ந்த அபிநயா சௌந்தர்யா வயது 25 இவர்கள் இருவரும் என்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்துள்ளனர் இவர்கள் இருவரும் பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியில் பக்கிங் காம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனித்தனியாக நண்பர்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர் பிரகாஷ் தனியார் வங்கியிலும் அபிநயா சௌந்தர்யா தனியார் நிறுவனத்திலும் ஊழியராக பணியாற்றி வருகின்றனர் இவர்கள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டு காலமாக உயிர்க்கு உயிராக காதலித்து வந்தனர் பிரகாஷும் அபிநயா சௌந்தர்யாவும் ஒரே பைக்கில் கட்டிப்பிடித்த படி உல்லாசமாக செம்பரம்பாக்கத்திற்கு கட்டிப்பிடித்தபடி சென்றனர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாப்பான் சத்திரம் என்ற இடத்தில் செல்லும்போது பின்னால் வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது இதில் அபிநயா சௌந்தர்யா தூக்கி வீசப்பட்டு துடி துடித்து இறந்து போனார் பிரகாஷ் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து போனார் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் ராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூர் பகுதியை சேர்ந்த முகமது ஹர்ஷத் வயது 27 என்பவனை கைது செய்தனர் கார் டிரைவர் தனது குடும்பத்தினருடன் கோவளம் தர்காவிற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது இந்த விபத்து நடந்து விட்டது என்று கூறியுள்ளான்