சென்னை கேகே நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் வயது 23 தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் குடிபோதையில் மனைவி பிரியாவிடம் தகராறு செய்து வந்துள்ளார் மனைவி பிரியாவோ கணவர் சாந்தகுமாரை தட்டி கேட்டும் அடங்காமல் போகவே பிரியா கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் போலீஸ்காரர் முபாரக் சாந்தகுமார் வீட்டிற்கு வந்து குடிக்காமல் ஒழுங்காக வேலைக்கு செல் இல்லையென்றால் உன் மீது நடவடிக்கை எடுப்பேன் என கண்டித்துள்ளார் இதனால் ஆத்திரம் அடைந்த சாந்தகுமார் நீ எனக்கு அட்வைஸ் செய்கிறாயா நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன் என ஆத்திரத்துடன் போலீஸ்காரர் முபாரக்கின் ஆட்காட்டி விரலை நறுக்கென கடித்து வழிந்த ரத்தத்தை சாந்தகுமார் முகத்தில் பூசிக் கொண்டாராம் காயமடைந்த முபாரக் கே கே நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் இதுகுறித்து கேகே நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது அதன் பேரில் கேகே நகர் போலீசார் வழக்கு பதிந்து சாந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
உற்சாக பானத்தில் மனைவியுடன் லடாய் விசாரணைக்குச் சென்ற போலீஸ்காரரின் ஆட்காட்டி விரலை கடித்த வாலிபர் கைது
