கோவை ஆர். எஸ். புரம், பி. எம். சாமி .காலனி 2-வது வீதியை சேர்ந்தவர் சுந்தரராஜன்,இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 43) இவர் கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். தடாகம் ரோடு – டி.வி. சாமி ரோடு சந்திப்பில் வரும் போது டிராபிக் அதிகமாக இருந்ததால் இருசக்கர வாகனத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார் . இது குறித்து புவனேஸ்வரி ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஊழியரிடம் தாலி செயின் பறிப்பு..!
