கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் 16 கோடியே 91 லட்சத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு நகரமன்ற கூட்டத்தில் நன்றி தெரிவித்த மேட்டுப்பாளையம் நகரமன்ற தலைவர்.
மேட்டுப்பாளையம் நகராட்சியின் அவசர கூட்டம் நகர்மன்றத் தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது. நகர மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு முனுசாமி மற்றும் நகராட்சி ஆணையாளர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் வைக்கப்பட்ட 12 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் அண்ணாஜி ராவ் ரோடு பகுதியில் ரூபாய் 4.4 கோடி மதிப்பில் தினசரி மார்க்கெட் கட்டுதல்,பழைய நகராட்சி அலுவலகம் அருகில் ரூபாய் 2.59 கோடியில் இறைச்சி மற்றும் மீன் மார்கெட் கட்டுதல், ரூபாய் 1.29 கோடி மதிப்பீட்டில் சிறுமுகை சாலையில் வார சந்தை கட்டுதல் ரூபாய் 8.63 கோடி மதிப்பீட்டில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தை நவீன மயமாக கட்டுதல் என 16.91 கோடி மதிப்பில் மேற்கண்ட நகர வளர்ச்சிக்கு அடிப்படை தேவையான கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வாயிலாக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிர்வாக அணுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேருவுக்கும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமிக்கும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து நகர மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும் கரகோஷத்துடன் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்..