48 மணி நேர கெடு நாளையுடன் முடிகிறது… அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அமித்ஷா போட்ட அதிரடி உத்தரவு.!

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலில் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் 48 மணி நேரகெடு நாளை முடியும் நிலையில் ஒரு பாகிஸ்தானியர் கூட நாட்டில் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசிய அமித்ஷா வேண்டுகோள் விடுத்தார்.

காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களுக்கு ஏப்ரல் 27 முதல் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.

அதற்கான 48 மணி நேர காலக்கெடு நாளையுடன் முடிகிறது. இந்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அனைத்து மாநில முதல்வர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது 48 மணி நேர காலக்கெடுவிற்கு பிறகு பாகிஸ்தானியர் யாரும் இந்தியாவில் தங்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அந்தந்தப் பகுதிகளில் தங்கியுள்ள பாகிஸ்தான் பிரஜைகளை அடையாளம் கண்டு, அவர்களை நாடு கடத்துவதை உறுதி செய்யுமாறு முதல்வர்களுக்கு அறிவுறுத்தினார்.