கோவை சிங்காநல்லூர் நீலிக் கோணாம் பாளையம், ராமசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் கருப்பையா ( வயது 42 )பிரபல கஞ்சா வியாபாரி இவர்சோமனூர் ஆத்துப்பாலம் பகுதியில் கஞ்சா விற்றதாக இவரை கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் தொடர்ந்து கஞ்சா வியாபாரம் செய்து வந்ததால் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன்மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.இதன் பேரில்மாவட்ட ஆட்சியர் பவன் குமார்கஞ்ச வியாபாரி கருப்பையாவை குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.இதை யடுத்து கருமத்தம்பட்டி போலீசார் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பிரபல கஞ்சா வியாபாரி மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்..!
