எரிசாராயம் கடத்திய வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது..!

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கேரளாவில்உள்ள கள்ளுகடைகளில் கள்ளில் கலப்பதற்காக சுமார் 5145 லிட்டர் எரிசாராயத்தை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் மகன் ஜான்விக்டர் (44) ரவி மகன் ரஞ்சித் குமார் (37) மற்றும் கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த பொண்ணு பிள்ளை மகன் பிரபாகரன் (49) ஆகியோரைபோலீசார் கைது செய்தனர்.இவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் .பவன்குமார் க.கிரியப்பனவர், 3 பேர் மீதும் குண்டர்தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி எரிசாராயம் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த வழக்கு குற்றவாளிகளான ஜான்விக்டர் (44) ரஞ்சித் குமார் (37) மற்றும் பிரபாகரன் (49)ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்கைதுசெய்யப்பட்டனர்இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.