திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தையில் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன் பொது மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
இந்த தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தில் பத்து ரூபாய் நாணயத்தை செலுத்தி மஞ்சப்பை பெற்றுக் கொள்ளும் பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தில் போன் பே பே டி எம் செயலி மூலம் ரூபாய் பத்து செலுத்தி மஞ்சப்பைகளை பெற்றுக் கொள்ளலாம். நெகிழி பயன்பாடு குறித்து அதனுடைய தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் தீமைகள் குறித்த துண்டு பிரசங்கங்களை பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். உடன் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் வட்டாட்சியர் சாந்தி, நகர மன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சாரதிகுமார், நகராட்சி பொறியாளர் சங்கர் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் உள்ளனர்..