தற்கொலை செய்து கொண்ட டி .ஜ..ஜி விஜயகுமாரின் உடல் காலை 11 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.அவரது தலையில் ஒரு துப்பாக்கிக் கொண்டு பாய்ந்திருப்பது தெரிய வந்தது.கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி சுதாகர் ,மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேஜிஸ்திரேட் ஆகியோர் முன்னிலையில் டாக்டர் ஜெய் சிங் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்தது. பிரேத பரிசோதனை வீடியோ எடுக்கப்பட்டது.பின்னர் அவரது உடலுக்கு ஐ.ஜி. சுதாகர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அவரது உடல் தேனி மாவட்டம் அணைக்கார பட்டிக்கு வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டது..
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டி ஐ.ஜி விஜயகுமார் தற்கொலைக்கு பயன்படுத்தியது அவரது “கன்மேன்” ரவி என்ற ரவிச்சந்திரனிடம் வழங்கபட்ட துப்பாக்கியாகும். எனவே அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..