ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து உடன் பிறந்த சகோதரனே என்னை ஏமாற்றி விட்டான். அவனை தூக்கில் போடுங்கள் கதறி கதறி அழுதார். அவர் பெயர் விவரம் வருமாறு அம்பத்தூர் கள்ளிக் குப்பம் பெருமாள் கோவில் தெரு முனுசாமியின் மகன் ஜெயபால் கொடுத்த புகாரில் கூறி இருப்பதாவது எனது தந்தை முனுசாமி 1950 ஆம் ஆண்டு கிரயம் பெற்று நாங்கள் குடியிருக்கும் வீட்டை கட்டிக் கொடுத்தார். எனது தந்தையின் காலத்திற்குப் பிறகு நானும் எனது சகோதரர்கள் நாராயணசாமி சுந்தரம் ஜெயராமன் ஆகிய 4 பேரும் வாரிசுதாரர்கள் சிலர் மட்டும் வெவ்வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்து விட்ட நிலையில் மேற்படி வீட்டின் சொத்து பத்திரங்கள் வீட்டின் வாரிசான சுந்தரம் என்பவனிடம் இருந்தது. இந்த நிலையில் சுந்தரம் இந்த சொத்திற்கு நான் ஒருவனே வாரிசு போலியான வாரிசு சான்றை ரெடி செய்துள்ளான் . அதை வைத்துக் கொண்டு சென்னை மவுண்ட் ரோடு கிளையில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மேனேஜரை அணுகி கொல்லாட்ரல் செக்யூரிட்டியாக காட்டி தான் நடத்தி வரும் ஹைடெக் எண்டர்பிரைசஸ் கம்பெனி பெயரில் ரூபாய் 16 லட்சம் கடன் பெற்றான் . வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் வங்கி தரப்பில் ஜப்தி நடவடிக்கை எடுத்த போது தான் ஜெயபாலுக்கு தெரிய வந்தது. ஹைடெக் என்டர்பிரைசஸ் கம்பெனியில் பங்குதாரர்களாக இருக்கும் சுந்தரத்தின் மகன் கோபு மற்ற நபர் களான பாலாஜி நேசராஜ் சதீஷ்குமார் ஆகியோரும் இந்த குற்ற செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். மற்ற வாரிசுதாரர்கள் இருப்பதை மறைத்து தான் ஒருவனே வாரிசு என்று காட்டி குடும்ப சொத்தை வங்கியில் அடமானம் வைத்து மோசடி செய்தது குறித்து ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 18 ஆண்டு காலமாக பூந்தமல்லி ஜூடி சியேல் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சுந்தரம் இறந்து விட்டதால் பாலாஜி நேசராஜ் சதீஷ்குமார் இரண்டு பேருக்கும் 6 மாத கால சிறை தண்டனையும் ரூபாய் 5000 வழங்கி உத்தரவிட்டிருந்தார். எதிரி கோபு என்பவன் தலைமறைவாக இருந்து வந்ததால் வழக்கை தனியாக பிரித்து விசாரணையில் இருந்து வந்தது. குற்றவாளி கோபு என்பவனை நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் பிராடு கோபுவிற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அதிரடி உத்தரவின் பேரில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த அரசு வழக்கறிஞர் சரத் பாபு மத்திய குற்ற பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்..