கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் மணிவேல் வயது 40 இவரது சொந்த ஊர் திருச்சி ஸ்ரீரங்கம் .இவர் வேலை செய்த வீட்டில் 35 வயது பெண் வேலை செய்து வந்தார் .அவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். மணிவேலுக்கு அந்தப் பெண்ணின் மீது மோகம் ஏற்பட்டது. இதனால் அவர் எப்படியாவது அவரை அடைய வேண்டும் என்று எண்ணினார் .இந்த நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர்கள் குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு சென்றிருந்தனர். அவர்கள் வருவதற்குள் எப்படியாவது வேலைக்காரப் பெண்ணை அடைய வேண்டும் என்று மணிவேல் திட்டம் தீட்டினார். இதன்படி கடந்த 17 -5- 20 18 அன்று இரவு 7 மணிக்கு அந்த பெண்ணை பார்த்த மணிவேல் வெளிநாடு சென்ற வீட்டின் உரிமையாளர்கள் திரும்பி வர உள்ளதால் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் வா என்று அழைத்தார். இதை உண்மை என்று நம்பி அந்த பெண் அவசரமாக வந்து வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார் .அப்போது அங்கு வந்த மணிவேல் வீட்டின் கதவை உள்பக்கம் தாழ் போட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் இது குறித்து வெளியே கூறிவிடுவார் என்ற அச்சத்தில் அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தார். மேலும் பெண்ணின் கழுத்தில் கடந்த 4 பவுன் செயினையும் பறிக்துக் கொண்டார். தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, நள்ளிரவு சிங்காநல்லூர் குளம் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டார்.இதற்கிடையே வேலைக்கு சென்றபெண் வீடு திரும்பாததால் அந்த பெண்ணின் கணவர் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். 2 நாட்களுக்கு பின் சிங்கநல்லூர் போலீசருக்கு சாக்கடை கால்வாயில் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்தது தொழிலதிபர் வீட்டில் வேலை செய்து வந்த பெண் என்பது தெரியவந்தது .இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அந்தப் பெண்ணை கார் டிரைவர் மணிவேல் பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று சாக்கடையில் வீசியது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் மணிவேலை கைது செய்தனர் .இந்த வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.கோர்ட்டில் நடந்து வந்தது .சாட்சி விசாரணைகள் முடிந்து வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது .பெண்ணை கொலை செய்த வழக்கில் மணிவேலுக்கு ஆயுள் தண்டனையும் |பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 10 ஆண்டு சிறையும் ,நகை அபகரித்தல், தடயம் அளித்தல் வழக்குகளில் தலா 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார் .மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார் .இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜியா ஆஜராகி வாதாடினார்..