கோவை உடையாம்பாளையம்,
அசோக் வீதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மல்லீஸ்வரி
(வயது 56) இவர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (எண் 5) நீதிமன்றத்தில் டைபீஸ்ட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் பீளமேட்டில் இருந்து டிஎஸ்பி அலுவலகம் வரை டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். உப்பிலிபாளையம் சிஎஸ்ஐ சர்ச் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கினார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை காணவில்லை .யாரோ பஸ்சில் வைத்து திருடிவிட்டனர். இது குறித்து மல்லீஸ்வரி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.