கோவை சாய்பாபா காலனி ,கே .கே .புதூர் சின்னச்சாமி விதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி அம்சவேணி (வயது73) .இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று மாலையில் இவர்வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் இவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து அம்சவேணி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ரெஜினா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.