மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கும் விழாவினை காணொளி காட்சியின் மூலம் துவக்கி வைத்தார். அதன்படி திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 59 வது வார்டு கல்லுக்குழியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் 50 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பெட்டகங்களை திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்கள் வழங்கினார்.
நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கௌசல்யா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா, வட்டார ஒருங்கிணைப்பாளர் மோகினி சில்சியா மற்றும் பகுதி செயலாளர் மணிவேல், மாமன்ற உறுப்பினர் கீதா பாலமுருகன்,வட்டச் செயலாளர் கணேசன் மூர்த்தி ,ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்..
திருச்சியில் ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கும் விழா – காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர்..!
