வால்பாறையில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டும் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் வேதனை அடைந் துள்ளனர்

கோவை மாவட்டம் வால்பாறை நகர்பகுதியில் வசிக்கும் சுமார் 10 ஆயிரம் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வால்பாறை நகராட்சி மூலம் சுமார் மூன்றுகோடி மதிப்பீட்டில் அக்காமலை செக்டேம் முதல் வால்பாறை கோ.ஆப்பரேட்டிவ் காலனி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தேக்கத்தொட்டி வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல் மிகவும் துரிதமாக நடைபெற்று வந்தது இந்நிலையில் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு பகுதியிலுள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் சாலையோரம் குழி தோண்டப்பட்டு அதிலிருந்த மண், கற்களை சாலையிலேயே போடப்பட்டு ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் கடந்த எட்டு மாதங்களாக அப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்துடனே சென்று வருகின்றனர் மேலும் இந்நிலை பற்றி சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறையினரின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் இதுவரையிலும் கண்டு கொள்ளாத நிலையில் விரைவில் தட்டுப்பாடின்றி சீரான குடிநீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றமடைந்து வருவதோடு வாகன ஓட்டிகளும் தினந்தோறும் சிரமமடைந்து வருகின்றனர் எனவே இந்நிலை மேலும் தொடராமல் தடுக்கும் வகையில் கிடப்பில் போடப்பட்டுள்ள பணியை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கவும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்கவும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்