கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. அதில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள 44 வது வார்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாநகராட்சி மேயர் காலனி வெங்கடாசலம் இவரின் மகள் காயத்ரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 44 வார்டு கவுன்சிலர் ஆனார். இவர் மக்களிடம் சென்று பிரச்சனைகள் குறித்து கேட்டு தீர்வு காண்பது போன்று சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவு செய்ய வந்தார். அதில் அவர் மீது தவறுகள் இல்லை என்பது போன்றும் மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவது போன்றும், அவர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களில் குறைகளை தீர்வு காண்பது போன்ற வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை என்றும் பத்து நாள்களுக்கு முன்பு பகுதி பொதுமக்கள் கூறியும் அதுவரை கண்டுகொள்ளாத கவுன்சிலர் பாராளுமன்றத் தேர்தல் நெருங்குவது ஒட்டி திடீரென இன்று அதிகாலை அப்பகுதிக்குச் காவல்துறை உதவி உடன் அங்கு சென்று குறைகளை கேட்பது போன்ற வீடியோ பதிவு செய்து உள்ளார். அதில் அவரிடம் அப்பகுதி பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். அதனை சமாளிப்பதற்காக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் ஊழியரிடம் மோட்டார் பழுதாகி உள்ளது. அதனை உடனடியாக சரி செய்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பகுதி பொதுமக்கள் பத்து நாளைக்கு முன்பு புகார் கூறியும் இதுவரை குடிநீர் வரவில்லை என்று கேள்வி எழுப்பும் வீடியோக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த அப்பகுதி பொதுமக்கள் கூறும்பொழுது :- தேர்தல் வரும் போது ஒட்டி மீண்டும் காலத்தில் இறங்கி வேலை செய்வது போன்று வீடியோக்களை பதிவு செய்ய தொடங்கி விட்டார் என்று குற்றம் சாட்டுகின்றனர்.