ஈஷா யோகா மையத்திற்குள் தகன மையம்… உச்சநீதிமன்றத்தில் கோவை காவல்துறை சொன்ன அதிர்ச்சி தகவல்.!!

ஷா யோகா மையத்திற்கு உள்ளேயே தகன மையம் செயல்பட்டு வருகிறது என ஈஷா யோகா மைய வழக்கில் தமிழக காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் ஈஷா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதனை ஜக்கி வாசுதேவ் நிறுவினார். ஈஷாவில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை கோவை காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் 23 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. அதன்படி ஈஷா மையம் சென்றவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள், ஆகியோர்கள பற்றிய புகார்கள் விபரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

15 ஆண்டுகளில் ஈஷாவில் மொத்தம் 6 காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த 6 வழக்குகளில், 5 வழக்குகளின் நடவடிக்கை கைவிடப்பட் நிலையில் காணாமல் போனவர் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் ஒரு வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் ஈஷா யோகா மையத்திற்கு சென்ற பலர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களை காவல்துறையினராலும் கண்டறிய முடியவில்லை. ஈஷா யோகா மையத்திற்கு உள்ளேயே தகன மையம் செயல்பட்டுவருகிறது என ஈஷா யோகா மைய வழக்கில் தமிழக காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.