வால்பாறையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் நிவாரண நிதி – மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..!

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற தமிழக அரசின் சிறப்பு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை தொடங்கி வைத்த கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் பின்பு தொழிலாளர்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறைச் சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று கொண்ட நிலையில் அரசு மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டார் . அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது தமிழக அரசின் சிறப்பு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான மனுக்கள் பெறப்பட்டுள்ளது அந்த மனுக்களின் மீது உரிய முறையில் விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்றும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தார் முன்னதாக கடந்த ஆண்டு வால்பாறை அருகே உள்ள ஊசிமலை எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த அபர்ணா என்ற குழந்தையின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் வனத்துறை சார்பாக வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை ஏற்கனவே வழங்கிய ரூ.50 ஆயிரம் ரூபாயுடன் மீதமுள்ள ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வழங்கி ஆறுதல் கூறினார் . அப்போது வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறைசார்ந்த அதிகாரிகளும் உடனிருந்தனர்..