கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவையில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 153 ரவுடிகளின் பெயர்கள் காவல் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ளது.கோவையில் 6 அணிகள் கொண்ட ரவுடிகள் கும்பல் செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.இவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இதை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.ரவுடிகள் யாராக இருந்தாலும் ஒடுக்கப்படுவார்கள்.நேற்று முன்தினம் இரவில் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நடந்த கொலையில் கோவையில் ஒரு இடத்தை காலி செய்வது தொடர்பாக இரு தொழிலதிபர்களுக்கு இடையே ஏற்பட்ட பணத்தகராறில் ஒரு தொழில் அதிபருக்கு ஆதரவாக சஞ்சையும்,மற்றொரு தொழிலதிபருக்கு ஆதரவாக சத்தியபாண்டியும் கூலிப்படை தலைவராக செயல்பட்டதாக தெரியவந்தது. இவர்கள் பயன்படுத்திய கைத்துப்பாக்கி வட மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டது என்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் யார் என்று அடையாளம் தெரிந்து உள்ளது. அவர்களை விரைவில் கைது செய்வோம்.கோபாலபுரத்தில் நடந்த கோகுல் கொலை வழக்கில் 5 பேர் அடையாளம் தெரிந்து உள்ளது அவர்களும்
விரைவில் கைது செய்யப்படுவார்கள். கோவையில் 446 ஏடிஎம் மையங்கள் உள்ளன.இவைகளில் பல ஏடிஎம் மையங்களுக்கு காவலாளி நியமிக்கப்படவில்லை.ஏடிஎம் மையங்களை கண்காணிப்பதற்கு தனி ரோந்து படை அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.