கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் உள்ள மன்றாம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 82) விவசாயி. இவர் நேற்று குறும்பபாளையம்- அரசம்பாளையம் ரோட்டில் மொபட் ஓட்டிக் கொண்டு சென்றார் . அங்குள்ள அம்மாசியப்பன் தோட்டம் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் உள்ள 6 அடி ஆழ சாக்கடைக் கால்வாயில் மொபட்டுடன் தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..
சாக்கடை கால்வாயில் மொபட்டுடன் தவறி விழுந்து விவசாயி பரிதாப பலி..
