கல்லூரி மாணவியை கேலி,கிண்டல், தட்டி கேட்ட தந்தைக்கு அடி, உதை – வாலிபர் கைது..!

கோவை வடவள்ளி அருகே உள்ள கணுவாய் ,வ. உ சி நகரை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மகள் நந்தினி ( வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு செல்லும் போது கணுவாய் டீச்சர்ஸ் காலனி சேர்ந்த சண்முகம் மகன் சந்துரு ( வயது 22) என்பவர் பாட்டு பாடி கேலி -கிண்டல் செய்தாராம் .இதை நந்தினி அவரது தந்தை சுரேஷிடம் கூறினார். சுரேஷ் அவரை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சந்துரு சுரேசை தாக்கி கீழே தள்ளினார். பின்னர் கத்தியை கட்டி மிரட்டினாராம்.இது குறித்து நந்தினி வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்கிளின்,சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சந்துருவை கைது செய்தனர் .இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தாக்குதல், உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..