ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற வன உயிரின குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜாராம்(38) என்ற நபர் வழக்கு சம்பந்தமாக சரிவர நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிமன்றம் மூலம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே ராஜாராம் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் பகுதியில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கடம்பூர் வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ராஜாராமை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்..