கோவை பீளமேடு ,ஹோப் காலேஜ் ஸ்ரீ நகரை சேர்ந்தவர் சுகுமாரன் .இவரது மனைவி சாந்தா ( வயது 78) இவர் நேற்று அவரது வீட்டின் போட்டிகோவில் உட்கார்ந்து இருந்தார்.அப்போது ஒரு ஆசாமி முகவரி கேட்பது அவரிடம் நெருங்கி வந்தார். ஒரு இடத்தை குறிப்பிட்டு கேட்டார் . அதற்கு மூதாட்டி பதில் சொல்லும் போது கண் இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து மூதாட்டி சாந்தா பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்..
முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் தங்கச் செயின் பறிப்பு..!
