கோவை ஆலாந்துறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு 800 மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு படித்த 13 வயது மாணவிக்கு அங்கு பணியாற்றிய உடற் கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த மாணவி பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன் உட்பட சில ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.. எனவே இந்த சம்பவம் குறித்து அந்த மாணவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர் .மேலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன், மத்வராயபுரம் அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் .இது போல 10 ஆசிரியர்களும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன்நேற்று ( ஞாயிறு) ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத வழக்கு தொடர்பாக தலைமையாசிரியை ஜீவா ஹட்சனை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற இருந்த நிலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..