நாடாளுமன்ற வளாகத்தில் மூலிகைத் தோட்டம்… விரைவில் மணக்க போகிறது… சபாநாயகர் ஓம் பிர்லா பெருமிதம்..!

டந்த 2020 டிசம்பர் 10 அன்று பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் இல்லம், குடியரசு துணைத் தலைவர் இல்லம், மத்திய செயலகம், மத்திய கருத்தரங்கு மையம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் என 51 அமைச்சகங்களின் அலுவலகங்களும் நாடாளுமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு வருகின்றன.

புதிய நாடாளுமன்றம்பசுமைப் பள்ளித் திட்டம்: காய்கறி, மூலிகை, மீன் வளர்ப்பு அசத்தும் திருவாரூர் அரசுப்பள்ளி மாணவர்கள்!

மொத்தம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில், நான்கு மாடிகளுடன் முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்றம் வேகமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய நாடாளுமன்ற வளாகத்தில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மூலிகைச் செடிகளை நட்டு மூலிகை தோட்டத்தை அமைத்துள்ளனர். இதற்காக கேரளா மற்றும் தென்னிந்தியாவில் இருந்து அதிகளவில் மூலிகைச் செடிகள் வந்துள்ளது.

மறைந்த அப்துல் கலாம் குடியரசுத்தலைவராக இருந்த போது, ஜனாதிபதி மாளிகையில் மூலிகைத் தோட்டத்தை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைப்போல இப்போது லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா முயற்சியில் இந்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மூலிகைத் தோட்டத்தை அமைக்க சபாநாயகர் வலியுறுத்தியதால் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆளுக்கு ஒரு மூலிகைச் செடியை நட்டனர்.

தமிழகத்தின் தி.மு.க., – அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களும், புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மூலிகைச் செடிகளை நட்டனர். பிரதமர் மோடி தன் கையால் சிவனுக்கு உகந்ததாக கருதப்படும் ருத்ராட்ச மூலிகைச் செடியை நட்டதாக கூறினார்கள். விரைவிலேயே பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மூலிகைத் தோட்டம் பணி நிறைவடையும். அதிலிருந்து மூலிகை நறுமணம் வீசும்” என்று ஓம் பிர்லா பெருமையுடன் தெரிவித்துள்ளார்..