கழுத்தை நெரித்து பெண்ணை கொலை செய்து நகை கொள்ளை வழக்கில் கொலையாளி இன்று சிக்கினான்..!

கழுத்தை நெரித்து பெண்ணை கொலை செய்து நகை கொள்ளை வழக்கில் கொலையாளி இன்று சிக்கினான்..கள்ளக்காதலால் கொலையா..? கோவை காளப்பட்டி அருகே உள்ள பாலாஜி நகர் பேஸ்- 2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 44)இவர் அன்னூரில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி ஜெகதீஸ்வரி( வயது 41)) இவர்களுக்கு கார்த்திகா( வயது 16 )என்ற மகள் உள்ளார்..இவர் அங்கு உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார். ஜெகதீஸ்வரி தினமும் தன்னுடைய மகளை அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு ஸ்கூட்டரில் அழைத்துச் செல்வார். 29-ந் தேதி காலையிலும் ஸ்கூட்டரில் மகளை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார். கணவரும் வேலைக்கு சேர்ந்தால் வீட்டில் ஜெகதீஸ்வரி மட்டும் தனியாக இருந்தார்.. இந்த நிலையில் மாலையில் தாய் அழைத்துச் செல்ல வருவார் என்றும் மகள் கார்த்திகா பள்ளியில் காத்து இருந்தார் .மாலை 5-30 மணி ஆகியும் தாய் வராததால் தனது வீட்டுக்கு கார்த்திகா நடந்து வந்தார். கதவை திறந்துஉள்ளே சென்று பார்த்தபோது தாய்ஜெகதீஸ்வரி படுக்கை அறையில் பிணமாக கிடைப்பதை பார்த்து கதறி அழுதார் .உடனடியாக அருகில் உள்ளவர்களை அழைத்து தன்னுடைய தாய் இறந்து கிடப்பது பற்றி தெரிவித்தார். இது குறித்து பீளமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. துணை போலீஸ் கமிஷனர் சண்முகம்,உதவி கமிஷனர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள் .இதில் ஜெகதீஸ்வரி கழுத்தில் கிடந்த 4 பவுன தங்கச்செயின் மற்றும் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் கம்மல், மோதிரம் மொத்தம் ஐந்தே முக்கால் பவுன்நகைகள் மாயமாகிஇருந்தது.ஜெகதீஸ்வரியை கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. மேலும் ஜெகதீஸ்வரிகொலை குறித்து அவரது கணவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். கொலை நடந்த வீட்டுக்குபோலீஸ் துப்பறியும் நாய் வெல்மா கொண்டு செல்லப்பட்டது அது சிறிது தூரம் ஓடியது யாரையும் பிடிக்கவில்லை. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வந்தது.கொலையாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் சண்முகம்,உதவி கமிஷனர் பார்த்திபன் ஆகியோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது .இவர்கள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.இதில் பைக்கில் வந்த ஒரு ஆசாமி கொலை நடந்த வீட்டில் 2 மணி நேரம் இருந்து விட்டு வெளியே சென்றது தெரியவந்தது.பைக்கில் இருந்த பதிவு எண்ணை வைத்து அந்த அசாமியார்? என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருந்த ஆசாமிதான் இந்த கொலையை நடத்தி இருப்பதும்,. கொலையை மறைப்பதற்காக நகைகளை எடுத்துச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.அந்த ஆசாமி இன்று காலையில் போலீஸ் பிடியில் சிக்கினான். அவனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.