வால்பாறை மந்திரி மட்டத்தில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண் புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்..!

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த அக்டோபர் 2021 ஆம் ஆண்டு முடிஸ் நகர் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் முடிஸ் நகர் பகுதியில் நடமாடிய சுமார் எட்டு மாத வயதுடைய ஆண் புலிக்குட்டியினை உயிருடன் மீட்டு மானாம்பள்ளி பவர்ஹவுஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை சார்ந்த புலி கூண்டில் வைத்து கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மந்திரிமட்டம் பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் ஆகியோர் உத்தரவின்படி ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் அறிவுரையின்படியும் தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு வழிகாட்டுதலின்படி மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையில் இன்று 22.07.2024 மந்திரிமட்டம் பகுதியில் உள்ள இயற்கை சார்ந்த புலிக்கூண்டில் இருந்து வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வனக்கால்நடை மருத்துவ குழுவினரின் ஆலோசனையின் படி உரிய முன்னேற்பாடுகளுடன் இடம் மாற்றம் செய்யப்பட்டது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்..