கோவிலில் பூஜையின் போது நடிகர் விஜய் பாடலை போடச் சொல்லி பூசாரியை தாக்கியவர் கைது..!

கோவிலில் பூஜையின் போது நடிகர் விஜய் பாடலை போடச் சொல்லி பூசாரியை தாக்கியவர் கைது..! கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள பதுவம்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் சாமிநாதன் ( வயது 40) இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கோவிலில் பூஜையின்போது ஒலிபெருக்கியில் ஆன்மீக பாடல்கள் இசைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த 3 பேர் பூசாரியிடம் ஆன்மீக பாடலை நிறுத்திவிட்டு நடிகர் விஜய் படத்தின் பாடல் போடு என்று கூறினார்கள்.அதற்கு பூசாரி மறுத்தார் இதனால் ஆத்திரமடைந்த, 3 பேரும் சேர்ந்து சாமிநாதனை சரமாரியாக தாக்கினார்கள். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மோப்பிரிபாளையத்தைச் சேர்ந்த செல்வக்குமார் ( வயது 22) என்பவரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்”