கோவையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி .இவரது மகன் ரஞ்சித் குமார் .இவர் தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று ஒருவர் மோசடி செய்து விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண்கள் 419, 420 ஐ.பி.சி 66D ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை மேற்க்கொண்டு காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் வழிக்காட்டுதலின்படி வழக்கின் எதிரியான பாலமுருகன் (வயது 30,) ஹோசப்பாளையம் ரோடு, பெங்களூர் என்பவரை காவல் ஆய்வாளர் பி.ஏ. அருண், உதவி ஆய்வாளர்கள் சிவராஜ், தாமரை கண்ணன் மற்றும் சைபர் கிரைம் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி எதிரியான பாலமுருகன் போலியான ஆவணங்களை தயாரித்து அதன் மூலம் மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மொபைல் போன்கள் மின்னணு சாதனங்கள் பல்வேறு 21 சிம்கார்டுகள், விசிட்டிங் கார்டுகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவை எதிரிமிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேற்படி இது போன்று யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.