கோவை மாவட்டம் காரமடை,தோலம்பாளையம் பகுதியில் ஒருவர் கஞ்சா செடி வளர்ப்பதாக காரமடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடமான
தோலம்பாளையம் அருகே சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போதை பொருளான கஞ்சா செடி வளர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பொன்னுசாமி மகன் கணேசன் (வயது 45) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிலோ எடையுள்ள 3 கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
கஞ்சா செடி பயிரிட்ட நபர் கைது..!
