கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ,சப்- இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ஆகியோர் நேற்று கீரனத்தம் ஐ.டி பார்க் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் ஒரு கிலோ 750 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் காந்திமா நகரை சேர்ந்த உன்னி என்ற மதுசுதன் ( வயது 30) என்பது தெரிய வந்தது. இவர் கஞ்சா வாங்கி வந்து அதை சிகரெட்டில் அடைத்து அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..