ஓசூர் ரயில் நிலையத்தில் 5 வயது சிறுமியை தவறவிட்ட தாயார் – மீட்டு ஒப்படைத்த போலீசார்..!

ஓசூர் ரயில் நிலையத்தில் 5 வயது சிறுமியை தவறவிட்ட தாயார்.
காலை 9 மணிக்கு கர்நாடக மாநிலம் பகுதியில் இருந்து ஐந்து வயது சிறுமி ஓசூர் ரயில் நிலையத்தில் 2 வது பிளாட்ஃபாமில் காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சமயம் தனியாக நின்று கொண்டு அழுது கொண்டிருந்தாள் . இருப்பு பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் விசாரித்த போது தனது தாயார் மேரி ரயில் வண்டியில் இறங்கிவிட்டதாகவும் அதே வண்டியில் எனது தாயார் மேரி பிளாட்பார்மில் என்னை விட்டுவிட்டு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று விட்டதாக அழுது கொண்டே கூறினாள் .சிறுமியின் தாயார் மேரிக்கு தகவல் கொடுத்து விசாரிக்கும் போது எங்கள் ஊரில் இருந்து பெரிய நாகா துணை ரயில் நிலையம் அருகே நாகமங்கலம் கிராமத்தில் உள்ள மாதா கோவிலுக்கு ஓசூர் ரயில் நிலையம் வந்ததாகவும் பெரிய நாகா துணை ரயில் நிலையம் என நினைத்து இறங்கிவிட்டதாக தாயார் மேரி கூறியுள்ளார் . திரும்பி வரும் போது  தவற விட்டு விட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார். சிறுமியை பத்திரமாக மீட்டு தாயாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்..