கோவை அவனாசி சாலையில் தெக்கலூர் அருகே இன்று காலையில் இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இதைப் பார்த்ததும் தனது காரை நிறுத்தச் சொன்னார்.காரை விட்டு இறங்கி வந்து அந்த வாலிபரை மீட்டு தனது காரில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். ராசா எம்.பி.யின் தன்னலமற்ற சேவையை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினார்கள்.மற்றொரு காரில் ராசா எம்.பி .விமான நிலையம் புறப்பட்டு சென்றார்..