ஷீன்ஸ் லாக் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.1 கோடியே 10 லட்சம் மோசடி செய்த நபர் கைது..!

ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் காவல்துறை ஆணையர் கி. ஷங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் அரபிந்தோ வயது 41. தகப்பனார் பெயர் துர்கா பிரசாத் ஜவகர் நகர் சென்னை. ஷீன்ஸ் லாக் பெயிண்ட்ஸ் லிமிடெட் கம்பெனியில் மேனேஜராக இருந்தபோது கடந்த 2020ம் ஆண்டு2022 வருடம் வரை திருவள்ளூர் மாவட்டம். வடக்கா நல்லூர் கிராமம் கொல்ல மேடு என்ற இடத்தில் கம்பெனிக்கு புதியதாக ஷெட் அமைக்க ஒர்க் ஆர்டர் அடிப்படையில் வேலையை மெசர்ஸ் குட்வில் மெட்டல் ஸ்டக் ரைசர்ஸ் கம்பெனிக்கு கொடுத்ததில் வங்கி மூலமாக இரண்டு தவணையாக ரூ 5 கோடி வரை பெற்றுக் கொண்டு அதன்படி வேலை செய்து வந்த நிலையில் திடீரென வேலையை செய்து முடிக்காமல் வந்த நிலையில் ஷீன்ஸ் பெயிண்ட்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய மீதித் தொகையை ரூபாய் 1 கோடி 10 லட்சத்து 84 ஆயிரத்து 371 ரூபாய் கொடுக்க வேண்டிய தொகையை தராமல் ஏமாற்றி வருவதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் அதிரடி போலீசார் சகிதம் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளி ஜெய் கணேஷ் வயது 48. தகப்பனார் பெயர் சடச்ச ரம். கம்பர் நகர். 5 வது தெரு கொளத்தூர் சென்னை என்பவனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டான்..