கோவை குடிமைபொருள் வழங்கல்துறை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் போலீசார் சின்ன தடாகம் அருகேவாகன சோதனை நடத்தி ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்பதை கண்காணித்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . காரும், ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 30 ) என்பவரை போலீசார் கைது செய்தனர் .மேலும் விசாரணை நடந்து வருகிறது..