கோவைபுதூர் – பேரூர் மெயின் ரோடு போஸ்டல் காலனி பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒருவர் ஸ்கூட்டரில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து ஒரு வேனில் ஏற்றிக் கொண்டிருந்தார். உடனே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அந்த நபரை மடக்கி பிடித்தனர்.விசாரணையில் அவர் செல்வபுரத்தைச் சேர்ந்த மில்டன் ராஜா ( வயது 38 )என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசி,ஸ்கூட்டர் ,வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது..
ஸ்கூட்டரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது..!
