கோவையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி 7-வது தடவை கைது..!

கோவையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி 7-வது தடவை கைது..! சென்னையில் உள்ள மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 16ஆம் தேதி இரவு செல்போனில் ஒரு நபர் தொடர்பு கொண்டார் .அவர் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் தான் ஒரு குழந்தையின் உடலில் வெடிகுண்டு பொருத்தி உள்ளதாகவும், ,அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். உடனே கட்டுப்பாட்டு அறை போலீசார் பேசியவரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் கோவையிலிருந்து பேசுது தெரியவந்தது .இது குறித்த தகவலின் பெயரில் கோவை மாநகர போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மாநில போலீஸ் கட்டுப்பாட்டை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கோவை சுகுணாபுரம் ‘செந்தமிழ் நகரை சேர்ந்த டி .ஆர். முகம்மது (வயது 44 ) என்பது தெரியவந்தது. இவர் குடிபோதையில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது .போலீசார் அவரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது கைதான பீர்முகமது 2017 ஆம் ஆண்டு கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குதொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தார் .இதே போல 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம்மற்றும் ஜூலை மாதம் குனியமுத்தூர் பகுதிகளில் வெடிகுண்டு வெடிக்கும் முடிந்தால் கண்டுபிடிங்கள் என்று மிரட்டல் விடுத்தார். 4 -வது முறையாக 20 20 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவை அரசு மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் மனித வெடிகுண்டாக மாறுவேன். என்று கூறி மிரட்டல் விடுத்தார். 5 – வது முறையாக 20 21 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை மெரினா கடற்கரையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்தார் . 6-வது முறையாக 20 22 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவையில் டாஸ்மாக் கடை வெடித்து சிதற போவதாக மிரட்டல் விடுத்தார் .தற்போது 7-வதுமுறையாக மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகி உள்ளார். ஏற்கனவே மிரட்டல் விடுத்த 6 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர் வழக்குகளில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் இவர் 6 தடவை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தும் இன்னும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லையே ஏன்? என்பது பொதுமக்களின் கேள்விக்குறியாக உள்ளது.