அதிகாரியின் மனைவியிடம் தங்க சங்கிலியை பறித்து ஓடிய போலீஸ்காரர்- மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.!!

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் அதிகாரி மனைவியிடம் 6 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற போலீஸ்காரரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது பற்றிய விவரம் வருமாறு

சென்னை பரங்கிமலை கன்டோன் மென்ட் போர்டில் வருவாய் கண்காணிப்பாளராக வேலை செய்பவர் கமலக்கண்ணன். இவர் தனது மனைவி விஜயலட்சுமியுடன் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிகாக மெட்ரோ ரயிலில் அரும்பாக்கம் வந்தார். ரயிலில் இருந்து இறங்கி வெளியே நடந்து சென்ற போது மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணிக்காக போலீஸ்காரர் ராஜதுரை(26) என்பவர்  திடீரென கமலக்கண்ணன் மனைவி விஜயலட்சுமி அணிந்திருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினான். விஜயலட்சுமியோ பதறிக் கொண்டே திருடன் திருடன் என அலறினார். கூச்சலை கேட்ட பொதுமக்கள் போலீஸ்கார திருடன் ராஜதுரையை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பலத்த காயமடைந்த போலீஸ்காரன் ராஜதுரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸ்காரன் ராஜதுரை ஆவடி பட்டா லயனில் பணியாற்றி வரும் அவன் மெட்ரோ ரயில் நிலைய பணிக்காக சேர்க்கப்பட்டார்  . அப்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீஸ் தரத்தில் கூறப்படுகிறது . இவன் இது போல் பல இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகப்படுகின்றனர். பிளாட்பார்மில் இருந்த பெண்கள் கும்பல்  கும்பலாக ஏண்டி இந்த போலீஸ்காரன் நகையை அறுத்துப்புட்டானாமே பேசிக்கொண்டனர்..