குன்னூர் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகள் பழுதடைந்து காணப்படுகின்றன..?

நீலகிரி மாவட்ட குன்னூர் மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிக்கட்டி காணிக்கராஜ் நகர் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகள் தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகின்றன, பல மாதங்களாகவே இந்த நெடுஞ்சாலைத்துறை சாலைகள் பல இடங்களில் குண்டும் குழியுமாகவே காணப்படுகின்றன இதனால் அப்பகுதியில் செல்லக்கூடிய இரண்டு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது, மற்றும் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிச்சலும் அவ்வப்போது ஏற்படுகின்றன, இதனை நெடுஞ்சாலைத்துறை கண்டு கொள்ளாமல் இருப்பதால் அப்பகுதி சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன, மற்றும் அப்பகுதி சாலை ஓரங்களில் வீட்டு உபயோக நீர் மற்றும் கழிவு நீர் கசைவதால் சாலைகளும் பாதி படுகின்றன, இதனை நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் பழுதடைந்து இருக்கும் சாலைகளை சீர் செய்து தந்தால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் தவிர்க்கப்படும் என்ற பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி கூறுகின்றனர், இதுபோன்ற சாலைகள் பல இடங்களில் பழுதடைந்து உள்ளதால் இருசக்கர வாகனங்களை ஓட்டு செல்லும் பெண்கள் தடுமாறி விழுகின்றன, இதனை பலமுறை நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்து துறை மற்றும் காவல் துறைக்கு தெரிவித்தும் இப்பகுதியில் சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பது மக்கள் மனதில் வேதனை ஏற்படுத்துகிறது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர், பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீர்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்?