தாம்பரம் : சமீப காலமாக தாம்பரம் பகுதிகளில் அதிக அளவில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அதிக அளவில் நடைபெறுவதாக தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையாளர் அபின் தினேஷ் மோடக் அவர்களின் கடுமையான உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை காவல் மாவட்டம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் வழிகாட்டுதலின்படி கேளம்பாக்கம் சரக காவல் உதவி ஆணையாளர் நேரடி மேற்பார்வையில் கேளம்பாக்கம் காவல் நிலைய பொறுப்பு கு ற்ற பிரிவு ஆய்வாளர் ஜி. வெங்கடேசன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் புகழேந்தி மற்றும் சுகுமார் ஆகியோர்களின் தலைமையில் இரண்டு குழு க்களாக தனி படை காவலர்களின் மூலம் கண்காணிக்கப்பட்டதில் செயின் பறிப்பு குற்ற சம்பவங்களில் நடைபெறும் இடங்களில் உள்ள சி சி டிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர்கள் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது .27.9.2024 ஆம் தேதி மாலை3.30 மணியளவில் படூர் விஜய் வித்யாஸ்ரமம் பகுதியில் பள்ளி முடித்து தனது குழந்தைகளை அழைத்துச் சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் அவரது பின்னால் வந்த கொள்ளையர்கள் அவரை வழிமறித்து அவர் அணிந்திருந்த தாலி தங்க சரடு மற்றும் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடிவிட்டதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் 2.10.2024 ஆம் தேதி காலை புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் பஸ் நிறுத்தத்தில் அருகில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேக ஆசாமிகளை பிடித்து மான் கொம்பு நைலான் கயிறு ஆகியவற்றை வைத்து தனி போலீஸ் படையினர் முரட்டு பாணியில் விசாரிக்கும் போது 1. ஜெய்சன் மேத்யூ வயது 31. தகப்பனார் பெயர் ஜான் ரவி. கேங் மாம் குவாட்டர்ஸ். பெங்களூரு.2. மணிகண்டா வயது 31.தகப்பனார் பெயர் குப்புசாமி. கென் சின் ட ன் ரோடு. அல்சூர் ஏரி. பெங்களூரு வடக்கு கர்நாடகா பெங்களூர் சேர்ந்தவர்கள் என்றும் . அங்கிருந்து மது வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்து ஆங்காங்கே உள்ள மதுபான கடைகளில் மது குடித்துவிட்டு நன்றாக சாப்பிட்டுவிட்டு ரூம் எடுத்து தங்கி ஜாலியாக செலவு செய்துவிட்டு மீண்டும் பெங்களூரு சென்று வருவதாக கூறினார்கள்.கடந்த 27.9.2024 ஆம் தேதி மது அருந்திவிட்டு படூர் பகுதியில் சென்ற பெண்மணியிடம் 8 சவரன் தங்க நகைகளை பறித்தோம்.என்பதை அழுது கொண்டே ஒப்புக்கொண்டார்கள். தயவுசெய்து மான் கொம்பால் எங்களை குத்தி சாகடித்து விடாதீர்கள். கையில் சுருள் கத்திகளை வைத்துக் கொண்டு உள்ளீர்கள்.அது எங்கள் உடம்பில் பட்டால் கு டலை உருவி விடும் . நாங்க உயிரோடு இருக்க மாட்டோம் எங்களை விட்டு விடுங்கள் . என அழுது கொண்டே கூறினார்கள். கேடிகள் ஜெய் சன் மேத்யூ மற்றும் மணிகண்டா ஆகியோர் தாம்பரம் மாநகர காவல் பகுதியில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. கேளம்பாக்கம் காவல் நிலைய குற்ற பிரிவில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 7 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது. நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டன ர்.தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர் ச ரகம் சிட்லபாக்கம் காவல் நிலையம் எம் ஐ டீ கல்லூரி பாலம் சர்வீஸ் சாலையில் 17.9.2024 ஆம் தேதி காலை 6.45 மணியளவில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த சாந்தகுமாரி வயது 69.கணவர் பெயர் கோபாலகிருஷ்ணன். கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியையும் மேலும்22.9.2024 ஆம் தேதி மாலை 3.15 மணிக்கு சாந்தி வயது 57. கணவர் பெயர் சண்முகம். என்பவர் கழுத்தில் இருந்து 4 1/2 சவரன் தங்க சங்கிலியை படக்கென்று அறுத்து சென்று விட்டனர். இரு சம்பவங்களிலும் சிட்லபாக்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கி டுக்கு பிடி விசாரணை மேற்கொண்டனர். சி சி டிவி கேமரா மூலம் பலே விசாரணை துவங்கியது. பல்லாவரம் குன்றத்தூர் காஞ்சிபுரம் காவேரிப்பாக்கம் வாலாஜா ஆற்காடு வேலூர் ஆகிய வழித்தடங்களில் 200 க்கும் மேற்பட்ட சி சி டிவி கேமராக்களை அலசி ஆராய்ந்து மீண்டும் சென்னை நோக்கி வந்த 350 கிலோமீட்டர் தூரம் பின் தொடர்ந்து பூந்தமல்லி புழல் மாதவரம் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சி சி டிவி ஆகிய பகுதியில் கிடைத்த ஆதாரங்களை வைத்து மாதாவரம் பேருந்து நிலையத்தில் வைத்து சிட்லபாக்கம் குற்றப்பிரிவு தனி போலீஸ் படையினர் சுருள் கத்தியை காண்பித்து பயங்கர கொள்ளை யர்கள் ஆன சசி வயது 52. தகப்பனார் பெயர் குஞ்சு குட்டி. கொச்ச வழியத்து. பனயல் வீடு. பெரிய நாடு அஞ்சல். திருக்கடவு ர் கிராமம் அஞ்சா லி மூடு கொல்லம் கேரள மாநிலம் உன்னை பிடித்து விசாரிக்க இவன் மீது 1995 முதல் 2000 வரை கேரள மாநிலம் கொல்லம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட சங்கிலி பறிப்பு சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. டேவிட் பிஜு என்ற பெயரில் குரோம்பேட்டை பல்லாவரம் சங்கர் நகர் பூந்தமல்லி ஆகிய காவல் நிலையங்களில் 2000 முதல் 2019 வரை இப்போது சிட்லபாக்கம் பகுதியில் தங்க சங்கிலி பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது புலன் விசாரணையில் தெரியவந்தது. குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Leave a Reply