கோவை : தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார் ( வயது 49) கூலித் தொழிலாளி. இவர் நேற்று காந்திபுரத்தில் இருந்து உக்கடத்துக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது சட்டை பையில் இருந்த 500 ரூபாயை 2 பேர் திருடி விட்டு தப்பி ஓட முயன்றனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் கணேஷ்குமார் மடக்கிப் பிடித்து உக்கடம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் பிரதீப் ( வயது 26) தருமபுரி மாவட்டம் அரூர்யாசின் ஜிலான் ( வயது 27) என்பது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
அறைக்குள் தூங்கி கொண்டிருந்த மாணவிக்கு செக்ஸ் தொல்லை – வாலிபருக்கு வலைவீச்சு..!
