கோவை அருகே உள்ள வடவள்ளி |லட்சுமி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மீனா ( வயது 63) கடந்த 2022-ம் ஆண்டு இவரது வீட்டில் பூட்டை உடைத்த துணிகர திருட்டு நடந்தது. இது தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, விஸ்வந்த் நகரை சேர்ந்த மூர்த்தி நவீன் என்ற அசோக் (வயது 30 )என்பவரை கைது செய்தனர்.இவர் மீது கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட மூர்த்தி நவீன் என்ற அசோக்கிற்கு ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.